மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூ. தலைவர் யெச்சூரி
மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லி,
முன்னாள் குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய யெச்சூரி, நாடாளுமன்றத்தையும், ஜனநாயகத்தையும் இன்று நீங்கள் பார்க்கும்போது, எங்களுக்கு ஆலோசனை வழங்கவும் வழிகாட்டவும் அவர் (பிரனாப் முகர்ஜி) எங்களுடன் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று விரும்புகிறோம்.
நாட்டின் நலனுக்காக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதை நான் பிரனாப் முகர்ஜியிடமிருந்து கற்றுக்கொண்டேன்' என்றார்.
Related Tags :
Next Story