பாதுகாப்பு குளறுபடி; பீகாரில் முதல் மந்திரி நிதிஷ்குமாரை நோக்கி பைக்கி வந்த இளைஞர்கள் கைது
நடைபயிற்சி சென்று கொண்டிருந்த முதல் மந்திரி நிதிஷ்குமாரை நோக்கி பைக்கில் வந்த இரு இளைஞர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாட்னா,
பீகாரில் முதல் மந்திரி நிதிஷ் குமார் இன்று காலை வழக்கமான நடைபயணம் மேற்கொண்ட போது அடையாளம் தெரியாத இருவர் பைக் ஒன்றில் பாதுகாப்பை மீறி முதல் மந்திரியை நோக்கி வந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.
பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, அவரின் பாதுகாப்பு வளையத்தை மீறி பைக்கில் வந்த இருவர் நிதிஷ்குமாரை நோக்கி வேகமாக வந்தனர். சுமார் 100 கிமீ வேகத்தில் பைக்கில் வந்த இளைஞர்களை பார்த்ததும் சுதாரித்துக்கொண்ட நிதிஷ்குமார் சாலையில் இருந்து உடனடியாக நடைபாதையின் மீது ஏறிவிட்டார்.
உரிய நேரத்தில் நிதிஷ்குமார் நகர்ந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட்டது சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். முதல் மந்திரியின் பாதுகாப்பு வீரர்கள் உடனடியாக பைக்கில் வந்த இருவரையும் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது