பயிற்சி கால ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க கோரிஅரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்


பயிற்சி கால ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க கோரிஅரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 March 2023 12:15 PM IST (Updated: 3 March 2023 12:16 PM IST)
t-max-icont-min-icon

பயிற்சி கால ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க கோரி அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவமொக்கா-

சிவமொக்கா டவுனில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 250-க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் பயிற்சிக்கால ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க கோரி கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டு வந்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகமோ, அரசு தரப்பிலோ எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த கல்லூரி மாணவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டகாரர்கள் கூறியதாவது:-

கால்நடை மருத்துவப்படிப்பின் போது, இறுதி ஆண்டில் 6 மாதங்கள் வெளி மாவட்டத்தில் பயிற்சி பெறவேண்டும். பின்னர் 6 மாதங்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று பயிற்சி பெற வேண்டியுள்ளது. இந்த காலக்கட்டங்களில் போக்குவரத்து, தங்குமிடம், உணவு ஆகியவற்றிற்கு அரசு சார்பில் ரூ.18 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கி வருகின்றனர். இந்த ஊக்கத்தொகை போதுமானதாக இல்லை. எனவே இந்த ஊக்கத்தொகையை உயர்த்தி ரூ.30 ஆயிரமாக வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சொந்த பணத்தை செலவு செய்துதான் பணியாற்ற வேண்டியுள்ளது. எனவே இதற்கு மாவட்ட நிர்வாகம், மற்றும் அரசு தரப்பில் நிரந்தர தீர்வு காணவேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினர்.



Next Story