காங்கிரஸ் மூத்த தலைவர் ஸ்ரீனிவாஸ் காலமானார்


காங்கிரஸ் மூத்த தலைவர் ஸ்ரீனிவாஸ் காலமானார்
x

ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஐதராபாத்,

ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் டி. ஸ்ரீனிவாஸ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார் என்று அவரது மகனும், நிஜாமாபாத் எம்.பி.யுமான டி. அரவிந்த் தெரிவித்துள்ளார். 76 வயதான ஸ்ரீனிவாஸ் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஆந்திராவின் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், மூன்று முறை எம்.எல்.ஏ.வாகவும், 2009-ம் ஆண்டு ராஜசேகர் ரெட்டி அரசில் உயர் கல்வி மற்றும் இடைநிலைக்கல்வி மந்திரியாக ஸ்ரீனிவாஸ் பதவி வகித்துள்ளார்.

மேலும் அவர் காங்கிரசிலிருந்து விலகி 2016 முதல் 2022ம் ஆண்டு வரை பாரத ராஷ்டிர சமிதி மாநிலங்களவை உறுப்பினரானார். பின்னர் மீண்டும் காங்கிரசிலேயே சேர்ந்தார். அவரது மறைவுக்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, தெலங்கானா மந்திரிகள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story