மல்யுத்த சம்மேளன தலைவர் மீது பாலியல் புகார்: விசாரணை கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


மல்யுத்த சம்மேளன தலைவர் மீது பாலியல் புகார்: விசாரணை கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
x

கோப்புப்படம் 

குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த 6 பேர் கொண்ட கமிட்டியை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்தது.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுப்பதாக பஜ்ரங் பூனியா, ரவி தாஹியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் குற்றம் சாட்டி டெல்லியில் கடந்த மாதம் 3 நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட கமிட்டியை அமைத்த மத்திய விளையாட்டு அமைச்சகம், விசாரணை முடியும் வரை பிரிஜ் பூஷணை தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்கவும் உத்தரவிட்டது.

இந்த மேற்பார்வை விசாரணை கமிட்டி 4 வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கமிட்டியின் வேண்டுகோளுக்கு இணங்க விசாரணை கமிட்டிக்கு மேலும் இரு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதாக விளையாட்டு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த கமிட்டி மார்ச் 9-ந்தேதிக்குள் தனது விசாரணை அறிக்கையை விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும்


Next Story