நாசிக்: ஏக்நாத் ஷிண்டே பேனா் மீது கருப்பு மை, முட்டை வீசி சிவசேனா கட்சியினா் போராட்டம்

Image Courtesy: ANI
மராட்டிய மாநிலம் நாசிக்கில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக போராட்டம் நடத்திய சிவசேனா் கட்சியினா் அவரது பேனா் மீது கருப்பு மை மற்றும் முட்டை வீசி எதிா்ப்பு தொிவித்தனா்.
மும்பை,
சிவசேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமை மீதான அதிருப்தி காரணமாக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓட்டலில் முகாமிட்டு உள்ளார். இதையடுத்து மாநிலத்தை ஆளும் சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக 6 சுயேட்சை எம்எல்ஏக்கள், 40 சிவசேனா எம்எல்ஏக்கள் என 46 போ் ஆதரவாக உள்ளனர்.
இந்த நிலையில், மராட்டிய மாநிலம், நாசிக்கில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக சிவசேனா கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த பகுதியில் வைக்கப்பட்ட பேனாில் இருந்த ஏக்நாத் ஷிண்டேவின் படத்தின் மீது கருப்பு மையை ஊற்றினா். மேலும், முட்டையையும் அவரது படத்தின் மீது வீசி அவருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.
Related Tags :
Next Story






