சிவசேனாவின் (உத்தவ்) இளைஞரணி செயலாளர் துர்கா போஸ்லே மாரடைப்பால் மரணம்


சிவசேனாவின் (உத்தவ்) இளைஞரணி செயலாளர் துர்கா போஸ்லே மாரடைப்பால் மரணம்
x

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் இளைஞரணி செயலாளராக இருந்த துர்கா போஸ்லே ஷிண்டே மாரடைப்பால் மரணம் அடைந்து உள்ளார்.

புனே,

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் இளைஞரணி செயலாளராக இருந்தவர் துர்கா போஸ்லே ஷிண்டே. இந்நிலையில் அவர் இன்று திடீரென மரணம் அடைந்து உள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

இதுபற்றி மராட்டியத்தில் மகா விகாஸ் அகாடி அரசில் முன்னாள் மந்திரியாக பதவி வகித்த ஆதித்ய தாக்கரே தனது டுவிட்டர் வழியே இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இளைஞர் அணியின் கடுமையாக உழைக்க கூடிய மற்றும் இரக்க குணம் கொண்டவர்களில் ஒருவரை நாங்கள் இழந்து உள்ளோம். ஓம் சாந்தி என அவர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

மராட்டியத்தின் தானே நகரில் ஆதித்ய தாக்கரே தலைமையிலான எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டபோது துர்காவுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதற்காக சமீபத்தில் பாம்பே மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவர் சிகிச்சையின்போது உயிரிழந்து விட்டார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவரது இறுதி ஊர்வலம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி, வாகேஷ்வர் பகுதியில் உடல் தகனம் நடைபெறும்.


Next Story