தேச விரோத செயல்களில் ஈடுபடும் இஸ்லாமிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்- பாஜக எம்எல்ஏ வலியுறுத்தல்


தேச விரோத செயல்களில் ஈடுபடும் இஸ்லாமிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்- பாஜக எம்எல்ஏ வலியுறுத்தல்
x

கர்நாடகாவில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பேனர் வைப்பதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

ஷிவமோஹா,

நாடு முழுவதும் நேற்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கர்நாடகாவின் ஷிவமோஹாவில் நேற்று நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பேனர் வைப்பதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

நேற்று நடந்த மோதல் சம்பவத்தின் போது பிரேம் சிங் என்ற என்ற நபரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனை தொடர்ந்து பிரேமை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக, நதீம், தன்வீர், சார்பி, அப்துல் ரஹ்மான் ஆகியோர் மீது போலீசார் ஐபிசி பிரிவு 307-ன் கீழ் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அங்கு 18-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 20 கி.மீ தொலைவில் உள்ள ஷிவமோகா மற்றும் அதன் தொழில்துறை நகரமான பத்ராவதியில் இன்று பள்ளிகள் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தேச விரோதச் செயல்களில் ஈடுபடும் இஸ்லாம் மதத்தை சேர்ந்த இளைஞர்கள் மீது அம்மதத்தை சேர்ந்த மூத்த தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக ஷிவமோஹா தொகுதி பாஜக எம்எல்ஏ கே.எஸ்.ஈஸ்வரப்பா வலியுறுத்தியுள்ளார்.

கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக பேசியுள்ள அவர், "இதுபோன்ற தேச விரோத செயல்களில் ஈடுபடும் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இஸ்லாம் சமூகத்தின் மூத்த உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன். இந்து சமுதாயம் உயர்ந்தால், இதுபோன்ற செயல்கள் நிலைக்காது." என தெரிவித்துள்ளார்.


Next Story