தொழில்நுட்ப கோளாறு காரணாமாக சிவராஜ் சிங் சவுகான் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

Image Courtesy : ANI
மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சென்ற ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
போபால்,
மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இன்று மனவர் பகுதியில் இருந்து தர் பகுதிக்கு தனியார் ஹெலிகாப்டரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்த பயணத்தை அவர் மேற்கொண்டார்.
இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிவராஜ் சிங் சவுகான் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிவராஜ் சிங் சவுகான் சாலை மார்க்கமாக புறப்பட்டுச் சென்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
Related Tags :
Next Story