குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி...!


குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி...!
x

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்ட குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. ஒடிசா கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை செங்குத்தாக ஏவப்பட்டு குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆளில்லா விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் புதிய ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே டி.ஆர்.டி.ஓ-வால் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றிகரமான சோதனையைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டிஆர்டிஓ, இந்திய கடற்படை மற்றும் தொடர்புடைய குழுவினரை பாராட்டினார். இந்த ஏவுகணை இந்திய கடற்படையின் வலிமையை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story