கொலை செய்து விட்டு ஷரத்தாவின் மோதிரத்தை புதிய காதலிக்கு பரிசாக கொடுத்த அப்தாப்


கொலை செய்து விட்டு  ஷரத்தாவின் மோதிரத்தை புதிய காதலிக்கு பரிசாக கொடுத்த அப்தாப்
x

கொலைக்கு பிறகு ஷரத்தாவின் மோதிரத்தை புதிய காதலிக்கு அப்தாப் அமீன் பரிசாக கொடுத்த தெரியவந்து உள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் வசாயை சேர்ந்த கால்சென்டர் ஊழியரான ஷரத்தா கடந்த மே மாதம் டெல்லியில் அவரது காதலன் அப்தாப் அமீனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். காதலியை கொலை செய்த அப்தாப் அமீன், உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திகில் நாவலை மிஞ்சும் இந்த கொலையில், தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.இந்தநிலையில் அப்தாப் அமீன் காதலி ஷரத்தாவை கொலை செய்துவிட்டு, அவரது மோதிரத்தை புதிய காதலிக்கு பரிசாக கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

அப்தாப் அமீன், ஷரத்தாவை கொலை செய்த பின்னர் உடலை துண்டு, துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்தார். அப்போது அவர் ஷரத்தாவின் மோதிரத்தை எடுத்து வைத்து உள்ளார். இந்தநிலையில் கொலை நடந்த சில நாட்களில் அவர் ஷரத்தாவை சந்தித்த அதே டேட்டிங் செயலியில் டெல்லியை சேர்ந்த பெண் ஒருவரை சந்தித்து உள்ளார்.

மேலும் அவர் அந்த பெண்ணை ஷரத்தாவின் உடல்வைக்கப்பட்டு இருந்த வீட்டுக்கு அழைத்து வந்து இருக்கிறார். அப்போது அவர் ஷரத்தாவின் மோதிரத்தை அந்த பெண்ணுக்கு பரிசாக கொடுத்து இருக்கிறார். அந்த பெண்ணிடம் இருந்து போலீசார் ஷரத்தாவின் மோதிரத்தை கைப்பற்றி உள்ளனர். மேலும் அப்தாப் அமீன் ஷரத்தாவின் உடலை வெட்ட பயன்படுத்த கத்தி ஒன்றையும் பறிமுதல் செய்து உள்ளனர்.


Next Story