மந்திரிகளுக்கு விருந்து அளித்த சித்தராமையா


மந்திரிகளுக்கு விருந்து அளித்த சித்தராமையா
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காவேரி பங்களாவில் மந்திரிகளுக்கு முதல் மந்திரி சித்தராமையா விருந்து அளித்தாா்.

பெங்களூரு

கர்நாடக மந்திரிசபை கூட்டம் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மந்திரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு முதல்-மந்திரி சித்தராமையா தனது காவேரி பங்களாவில் மந்திரிகள் அனைவருக்கும் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் மந்திரிகள் கலந்து கொண்டனர். இதில் மந்திரிகளுக்கு சைவ-அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.அரசு துறைகளில் பணியாற்றும் வீரசைவ-லிங்காயத் சமூக அதிகாரிகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்று மூத்த எம்.எல்.ஏ.க்களில் முதன்மையானவராக உள்ள சாமனூர் சிவசங்கரப்பா கூறினார்.

அவரது இந்த கருத்து அரசில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை சித்தராமையா வெளியிட வேண்டும் என்று சொந்த கட்சி தலைவர்களே அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் மந்திரிகளுக்கு சித்தராமையா விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story