சித்தராமையா சமுதாயத்திற்கு நல்லது செய்யவில்லை; மந்திரி அஸ்வத் நாராயண் சொல்கிறார்
சித்தராமையா சமுதாயத்திற்கு நல்லது செய்யவில்லை என்று மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ஹர் கர் திரங்கா என்று கூறி பா.ஜனதா நாடகமாடுகிறது என்று கூறியுள்ளார். நாடகமாடுவது என்படி என்பது சித்தராமையாவுக்கு நன்கு தெரியும். சுதந்திர தினத்தை கொண்டாடுவது ஒவ்வொருவரின் கடமை. மத்திய அரசு சுதந்திர தின பவள விழா கொண்டாட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் குறை கண்டுபிடிப்பது தவறு.
தேசபக்தி, நாட்டை கட்டமைப்பது, நாட்டிற்கு சேவையாற்றுவது ஆகியவை முக்கியமான பணியாகும். சித்தராமையா சமுதாயத்திற்கு நல்லது செய்யவில்லை. ஆனால் குழப்பத்தை ஏற்படுத்தும் கருத்துகளை அவர் கூறாமல் இருப்பது நல்லது. தவறான தகவல்களை கூறி குழப்பங்களை ஏற்படுத்துவதை அவர் தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களின் கருத்துகளை கூற முடியும். ஆனால் அந்த கருத்துகள் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.