சித்தராமையா முதல்-மந்திரி ஆனால் இந்துக்கள் தாக்கப்படுவார்கள்; சிக்கமகளூருவில், சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேச்சு


சித்தராமையா முதல்-மந்திரி ஆனால் இந்துக்கள் தாக்கப்படுவார்கள்; சிக்கமகளூருவில், சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 27 Nov 2022 6:45 PM GMT (Updated: 27 Nov 2022 6:46 PM GMT)

சித்தராமையா முதல்-மந்திரி ஆனால் இந்துக்கள் தாக்கப்படுவார்கள் என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

பெங்களூரு:

கெட்ட அர்த்தம்

சிக்கமகளூருவில் பா.ஜனதாவின் 'ஜனசங்கல்ப' யாத்திரை பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

தேர்தல் வரும்போது நான் இந்து என்று சித்தராமையா சொல்கிறார். அதன் பிறகு அவருக்கு நெற்றியில் வைக்கும் குங்குமத்தை கண்டால் பிடிக்காது. அவர் முதல்-மந்திரி ஆனால் இந்துக்கள் தாக்கப்படுவார்கள். இந்து என்றால் அது ஒரு கெட்ட அர்த்தம் கொண்ட பெயர் என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சொல்கிறார்கள். ராணுவத்தினர் நமது முன்பு வரும்போது ஜெய்'ஹிந்த்' என்று நாம் சொல்கிறோம்.

திப்பு சுல்தான் பல்கலைக்கழகம்

அத்தகைய இந்து வார்த்தையை காங்கிரசார் அவமதிக்கிறார்கள். யாருக்கு தங்களின் தந்தை மீது சந்தேகம் எழுகிறதோ அத்தகையவர்களுக்கு ராணுவ வீரர்கள் மீதும் சந்தேகம் எழும். காங்கிரசில் தற்போது உள்ளவர்கள் இத்தாலி காந்திகள். இன்னொருவர் (குமாரசாமி) தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்-மந்திரி ஆக்குவேன் என்று கூறியுள்ளார். ஆனால் ஜனதா தளம் (எஸ்) கட்சி ஆட்சிக்கு வரவே முடியாது. திப்புசுல்தான் பல்கலைக்கழகத்தை தொடங்கி ஜிகாதி குறித்து கற்பிக்க உள்ளார்களாம். அந்த பல்கலைக்கழகத்திற்கு கல் வைக்க கூட விட மாட்டோம்.

இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.


Next Story