சித்து மூஸ்வாலா உடல் சொந்த ஊரில் தகனம்; இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு


சித்து மூஸ்வாலா உடல் சொந்த ஊரில் தகனம்; இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
x

சித்து மூஸ்வாலா உடல் இன்று அவரது சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பஞ்சாப்பின் மான்சா மாவட்டத்தை சேர்ந்தவர் சித்து மூஸ்வாலா. பிரபல பஞ்சாபி மொழி பாடகரான இவர், சமீபத்தில் நடந்த மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சியின் முன்னணி தலைவராக செயல்பட்டு வந்த இவர் சட்டசபை தேர்தலில் மான்சா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் மான்சா மாவட்டத்தில் நேற்று முன் தினம் இவர் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் அவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பி ஓடினர்.இதில் படுகாயமடைந்த சித்து மூஸ்வாலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்து உள்ளனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சித்து மூஸ்வாலா உடல் இன்று அவரது சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


Next Story