கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு முதல் அரசு சார்பில் சர் எம்.விஸ்வேசுவரய்யா பிறந்த நாள் விழா நடத்தப்படும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு


கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு முதல் அரசு சார்பில் சர் எம்.விஸ்வேசுவரய்யா பிறந்த நாள் விழா நடத்தப்படும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் சர்.எம்.விஸ்வேசுவரய்யா பிறந்த நாள் விழா நடத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

மின்துறையிலும் பங்களிப்பு

பொறியாளர் சர் எம்.வி.விஸ்வேசுவரய்யா பிறந்த நாள், என்ஜினீயர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பெங்களூரு கே.ஆர்.சர்க்கிளில் உள்ள அவரது சிலைக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சர் எம்.விஸ்வேசுவரய்யா கர்நாடகத்தின் பெருமை மிகு புதல்வர். அவர் எப்போதும் நமக்கு உந்துசக்தியாக திகழ்கிறார். கர்நாடகத்தை கட்டமைத்தவர்களில் முக்கயமானவர். அவர் 90 வயது வரை வாழ்ந்து தனது வாழ்க்யைின் ஒவ்வொரு கனமும் கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார். இவ்வளவு அறிவார்ந்த நபர்கள் இருப்பது மிக மிக குறைவு. அவர் அணைகள் மற்றும் சாலைகளை மட்டும் அமைக்கவில்லை, மின்துறையிலும் அவரது பங்களிப்பு அபாரமானது.

காகித ஆலைகள்

பெரிய தொழில் நிறுவனங்களை நிறுவினார். கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இரும்பாலை, சிமெண்டு, காகித ஆலைகளை மைசூரு மகாராஜாக்களின் வழிகாட்டுதலில் நிறுவினார். கே.ஆர்.எஸ். அணையை நிறுவிய அவர், அதன் மூலம் காவிரி படுகையில் உள்ள விவசாயிகள் பெரிய அளவில் பயனடைந்து வருகிறார்கள். கல்லூரிகளை தொடங்கியது, இட ஒதுக்கீடு, நிதித்துறையில் மைசூரு வங்கியை தொடங்கியது போன்ற விஷயங்களையும் செய்தார். இனி ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலைநகரங்களில் சர்.எம்.விஸ்வேசுவரய்யா பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

இதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல், சுற்றுலா மந்திரி ஆனந்த்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story