அரிவாளால் வெட்டி அண்ணி படுகொலை; வாலிபருக்கு வலைவீச்சு


அரிவாளால் வெட்டி அண்ணி படுகொலை; வாலிபருக்கு வலைவீச்சு
x

குந்துகோலில் சொத்து தகராறில் அண்ணியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

உப்பள்ளி;


சொத்து தகராறு

தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா எரிநாராயணபுரா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 43). விவசாயி. இவரது மனைவி சுனந்தா (38). இந்த தம்பதிக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. மஞ்சுநாத் குடும்பத்திற்கு விளைநிலங்கள் உள்ளன.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர், குடும்ப சொத்தை பிரித்து கொடுப்பதில் மஞ்சுநாத்திற்கும், அவரது சகோதரர் நீலப்பாவுக்கும் (32) இடையே தகராறு இருந்து வந்தது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சொத்து பிரிப்பது குறித்து மஞ்சுநாத்திற்கும், அவரது சகோதரர் நீலப்பாவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் விலக்கிவிட்டனர்.

கொலை

இதையடுத்து நேற்று மஞ்சுநாத் வீட்டிற்கு சென்ற நீலப்பா, வீட்டில் இருந்த சுனந்தாவை அரிவாளால் கழுத்தில் வெட்டினார். இதில் தலை, தோல்பட்டையில் படுகாயம் ஏற்பட்டு, சுனந்தா சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து நீலப்பா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு குந்துகோல் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும், சுனந்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்துவிட்டு தப்பியோடி தலைமறைவாக உள்ள நீலப்பாவை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story