சத்தீஸ்கரில் சுரங்கம் இடிந்து விபத்து - பெண்கள் உள்பட 6 பேர் பலி
சுண்ணாம்பு கல் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்டர் மாவட்டம் மல்கொன் கிராமத்தில் சுண்ணாம்பு கல் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் சுண்ணாம்பு கல் சுரங்கத்தில் நேற்று சிலர் சுண்ணாம்பு கல் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்தது. இதில், சுரங்கத்தில் இருந்த பெண்கள் உள்பட பலர் சிக்கிகொண்டனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். சுரங்கத்திற்குள் சிக்கிய 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் சிக்கி 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக தலா 4 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று சத்தீஸ்கர் முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story