தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.எம்.கிருஷ்ணா 'டிஸ்சார்ஜ்' ஆனார்


தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.எம்.கிருஷ்ணா டிஸ்சார்ஜ் ஆனார்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.எம்.கிருஷ்ணா ‘டிஸ்சார்ஜ்’ ஆனார்.

பெங்களூரு:

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா. இவர், பெங்களூரு சதாசிவநகரில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தீவிர காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டதால், பழைய விமான நிலைய ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் எஸ்.எம்.கிருஷ்ணா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து, எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில், எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் நிலை சீரானதை தொடர்ந்து, தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். எஸ்.எம்.கிருஷ்ணா உடல் ஆரோக்கியமாக இருப்பதாக தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் தெரிவித்துள்ளார்.

====

1 More update

Next Story