சிறிய கட்சிகளுக்கு பா.ஜனதா அழுத்தம் கொடுக்கிறது- சிவசேனா குற்றச்சாட்டு
மாநிலங்களவை தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென பா.ஜனதா சிறிய கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக சஞ்சய் ராவத் குற்றம் சாட்டி உள்ளார்.
மும்பை,
மாநிலங்களவை தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென பா.ஜனதா சிறிய கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக சஞ்சய் ராவத் குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " 3-வது வேட்பாளரை நிறுத்தியதன் மூலம் பா.ஜனதா மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிட முடிவு செய்து உள்ளது. அவர்கள் சிறிய கட்சிகள், சுயேச்சைகளை தான் நம்பி உள்ளனர். எனவே சிறிய கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
அது குறித்த எல்லா தகவல்களும் எங்களுக்கு வருகின்றன. மகாவிகாஸ் அகாடி அரசும் தேர்தலில் தீவிரமாக போட்டியிடுகிறது. ஆனால் எங்களிடம் அமலாக்கத்துறை மட்டும் தான் இல்லை. பா.ஜனதா தேர்தலுக்காக பணத்தை வீணாக்க கூடாது. அவர்கள் அதை சமூக பணிகளுக்கு பயன்படுத்தலாம். மகாவிகாஸ் அகாடி கூட்டணி 4 இடங்களிலும் வெற்றி பெறும். " என்றார்.
Related Tags :
Next Story