நடுவானில் விமானத்திற்குள் படுத்துக்கொண்டு சிகரெட் புகைத்த யூடியூபர் மீது பாய்ந்த வழக்கு


நடுவானில் விமானத்திற்குள் படுத்துக்கொண்டு சிகரெட் புகைத்த யூடியூபர் மீது பாய்ந்த வழக்கு
x

நடுவானில் விமானத்திற்குள் ஒய்யாரமாய் படுத்துக்கொண்டு யூடியூபர் சிகரெட் புகைக்கும் வீடியோ வைரலானது.

டெல்லி,

டெல்லியை சேர்ந்த யூடியூபர் பாபி என்கிற பல்விந்தர் கட்டாரியா. இவர் கடந்த ஜனவரி 21-ம் தேதி துபாயில் இருந்து டெல்லி வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் படுத்துக்கொண்டு சிகரெட் புகைக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்திற்குள் பாபி சிகிரெட் புகைக்கும் வீடியோ வைரலனான நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க பல தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விமான நிறுவனம் தரப்பில் குருகிராம் போலீசில் பாபி மீது பிப்ரவரி 2-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது.

ஆனால், இந்த வழக்கு டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு உட்பட்ட பகுதியின் கீழ் வரும் எனவும், இந்த வழக்கு டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் வரும் குருகிராம் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குருகிராம் போலீஸ் இந்த வழக்கை எடுத்துக்கொள்ளாத நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தரப்பில் பாபி மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை தொடர்ந்து யூடியூப் பிரபலம் பாபி மீது டெல்லி போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் பாபியை டெல்லி போலீசார் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



Next Story