அயன் பட பாணியில் தங்கம் கடத்தல்... கொச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து 5 வது நாளாக பிடிபட்ட கடத்தல் தங்கம்


அயன் பட பாணியில் தங்கம் கடத்தல்... கொச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து 5 வது நாளாக பிடிபட்ட கடத்தல் தங்கம்
x
தினத்தந்தி 22 Oct 2022 10:59 AM GMT (Updated: 22 Oct 2022 11:02 AM GMT)

கொச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 44.13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கேரளா:

கொச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் உடலுக்குள் ஒளித்து கடத்திவரப்பட்ட 44.13 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1185.90 கிராம் எடை கொண்ட கேப்சூல் வடிவிலான 4 தங்க கட்டிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்துள்ள தகவல் வருமாறு, வளைகுடா நாடான துபாயில் இருந்து கொச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு இண்டிகோ ஏர் ஜெட் விமானத்தில் பயணம் செய்து வந்தவர் மலப்புரம் மாவட்டம் காடம்புழா பகுதியைச் சேர்ந்த முனீர் (வயது 42). இவர் நடவடிக்கைகளில் சந்தேகம் தோன்றியதை அடுத்து கலால் துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது இவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

தொடர்ந்து இவரை உடற் பரிசோதனை செய்தபோதுல், இவர் தனது உடலுக்குள் மல துவாரத்தில் ஒளித்து வைத்திருந்த 44.13 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1185.90 கிராம் எடை கொண்ட 4 தங்க கேப்ஸூல்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

அவர் இவற்றை உறைகளில் வைத்து அதனை ஒளித்து வைத்து கடத்தி வந்தது கலால் துறையினரின் விசாரணையில் வெளியானது. இவற்றை உருக்கி எடுத்தால் 1008 கிராம் எடை கொண்ட சுத்தமான 24 கேரட் தங்கம் கிடைக்கும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து கைதான முனீர் அங்கமாலி முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக கடத்தல் தங்கம் பிடிபடுவது குறிப்பிடத்தக்கது.


Next Story