உச்ச நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது: கபில் சிபல் வேதனை


உச்ச நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது: கபில் சிபல் வேதனை
x

உச்ச நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது என கபில் சிபல் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், உச்ச நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது எனவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கபில் சிபல் கூறியதாவது;- உச்ச நீதிமன்றம் மூலம் உங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நீங்கள் நம்பினால், நீங்கள் தவறான எண்ணத்தில் உள்ளீர்கள். உச்ச நீதிமன்றத்தில் 50 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய நான் இதை சொல்கிறேன்.

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நீதிமன்றம் வழங்கினாலும், அந்த தீர்ப்பு கள யதார்த்தத்தை மாற்றிவிடாது. உச்சநீதிமன்றம் உங்களுக்கான தனிமனித சுதந்திரத்தை உறுதி செய்துள்ளது. ஆனால், அமலாக்கத்துறையினர் திடீரென உங்கள் வீடுகளுக்கு புகுந்து ரெய்டு நடத்தலாம். அப்படியெனில் இந்த தனியுரிமை எங்கு போனது?' என்றார்.


Next Story