சமூகவலைத்தள பழக்கம் விபரீதமானது: கேரள கன்னியாஸ்திரி மடத்தில் 3 மாணவிகள் பலாத்காரம்
சமூகவலைத்தள பழக்கத்தால் கேரள கன்னியாஸ்திரி மடத்தில் 3 மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஒரு கன்னியாஸ்திரி மடம் உள்ளது. இங்குள்ள விடுதியில் கன்னியாஸ்திரிகளும், சில மாணவிகளும் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கன்னியாஸ்திரி மடத்திற்குள்ளே இருந்து 3 பேர் சுவர் ஏறி வெளியே குதித்தனர். இதனை கவனித்த போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது, 3 பேரும் அங்கு தங்கி படிக்கும் 3 மாணவிகளை பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். சமூக வலைத்தளம் மூலம் 3 பேருக்கும், மாணவிகளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கத்தை பயன்படுத்தி மாணவிகளிடம் அவர்கள் ஆசைவார்த்தைகளை கூறியுள்ளனர். அப்போது இரவு நேரத்தில் மடத்திற்குள் புகுந்த அவர்கள் மாணவிகளுக்கு மதுவாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் சில நாட்களாக நடந்துள்ளது. 3 பேரும் திருவனந்தபுரத்தை பகுதியைச் சேர்ந்த 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ஆவர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பலாத்காரம் செய்யப்பட்ட 3 மாணவிகளும் 18 வயதிற்கு குறைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.