14 வயது 'குடிசை பகுதி இளவரசி'க்கு ஹாலிவுட் ஆபர்..! 'மலீஷா' சாதனை பற்றி தெரியுமா...?


14 வயது குடிசை பகுதி இளவரசிக்கு ஹாலிவுட் ஆபர்..! மலீஷா சாதனை பற்றி தெரியுமா...?
x

நீங்கள் முயற்சி செய்தால், உங்கள் கனவுகள் நனவாகும். அதற்கு உதாரணம் தான் மலீஷா கர்வா.

மும்பை

நீங்கள் முயற்சி செய்தால், உங்கள் கனவுகள் நனவாகும். அதற்கு உதாரணம் தான் மலீஷா கர்வா.

மும்பையின் தாராவி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி மலீஷா கர்வா "பார்ஸ்ட் எசென்ஷியல்ஸ்" எனும் ஆடம்பர அழகு சாதன பிராண்டின் விளம்பர தூதராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அதன்படி "தி யுவி கலெக்ஷன்" எனும் பெயரில் விளம்பரங்களில் நடிக்க உள்ளார். மேலும், இந்த இளம் பெண்ணுக்கு இரண்டு ஹாலிவுட் படங்களில் இருந்து வாய்ப்புகள் வந்துள்ளன.

ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாப்மேன் மூலம் கடந்த 2020 ஆண்டு கண்டறியப்பட்டவர் தான் மலீஷா கர்வா. பின் மலீஷா கர்வா-வை ராபர்ட் ஹாப்மேன் தனது வளர்ப்பு மகளாகவும் அறிவித்தார்.

இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் பாலோயர்கள் உள்ளனர். தனது இன்ஸ்டா பதிவுகளில் #princessfromtheslum (குடிசை பகுதி இளவரசி) எனும் ஹாஷ்டேக்கை பயன்படுத்துவதை இவர் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு வளர்ந்து வந்த மலிஷா கார்வா ஏராளமான விளம்பரங்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் "லிவ் யுவர் ஃபேரிடேல்" எனும் குறும்படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் ஐந்து சேரிக் குழந்தைகளின் வாழ்க்கையில் முதல் முறையாக உணவகத்தில் உணவருந்தும் அனுபவங்களை சித்தரித்தது.

இந்த நிலையில், மலிஷா கார்வா அழகு சாதன பிராண்டின் விளம்பர முகமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவரை விளம்பர தூதராக அறிவிக்கும் பதிவில் பாரஸ்ட் எசன்ஷியல்ஸ், "அவளின் முகம் முழுக்க மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. அவளின் கனவுகள் அவள் கண் முன்னே நிறைவேறியது.

மலீஷாவின் வாழ்க்கை, கனவுகள் உண்மையாகும் என்பதற்கு அழகான நினைவூட்டி என்றே கூறலாம் என்று குறிப்பிட்டுள்ளது. இத்துடன் மலிஷா கார்வாவின் வீடியோவும் இணைக்கப்பட்டு இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தனது வாழ்க்கையில் வந்துள்ள புதிய வாய்ப்புகள் குறித்து மலீஷா கூறியதாவது:-

"நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். மக்கள் என்னை எங்கோ பார்க்கிறார்கள், என்னை அடையாளம் காண்கிறார்கள். அவர்கள் எனது ரசிகர்கள், அது எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது" என்று அப்பாவியாக கூறுகிறார்.


Next Story