டெல்லியில் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை; சோனியா காந்தியும் பங்கேற்பு
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று காலை தலைநகர் டெல்லிக்குள் வந்துள்ளது. டெல்லியில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தி நடைபயணம் மேற்கொண்டார்.
புதுடெல்லி,
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். ராகுலின் இந்த பாத யாத்திரை 100 நாட்களை கடந்துள்ளது. தலைநகர் டெல்லிக்கு பாரத் ஜோடோ யாத்திரை இன்று நுழைந்துள்ளது.
டெல்லிக்கு வந்த ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான சோனியா காந்தியும் பங்கேற்றார். மாஸ்க் அணிந்தபடி சிறிது தூரம் தனது மகன் ராகுல் காந்தியுடன் நடைபயணமாக சோனியா காந்தி சென்றார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இந்த பாத யாத்திரையில் பங்கேற்றார்.
Related Tags :
Next Story