இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
x
தினத்தந்தி 17 May 2023 11:34 AM IST (Updated: 19 Aug 2023 1:12 PM IST)
t-max-icont-min-icon

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இதுவரை கங்குலிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்புக்கான கால அவகாசம் முடிவுக்கு வந்த நிலையில், கங்குலிக்கான பாதுகாப்பை இசட் பிரிவுக்கு உயர்த்த மேற்கு வங்காள அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில மூத்த அதிகாரி தெரிவித்தார். இசட் பிரிவு பாதுகாப்பின் படி சவுரவ் கங்குலிக்கு 8 முதல் 10 போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள்.

சவுரவ் கங்குலி தற்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார். வரும் 21 ஆம் தேதி கங்குலி கொல்கத்தா வருகை தருகிறார். அதன்பிறகு அவருக்கு தினமும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

1 More update

Next Story