சரியாக பதில் கிடைப்பது இல்லை என உறுப்பினர்கள் அதிருப்தி: கர்நாடக அரசுக்கு சபாநாயகர் காகேரி உத்தரவு


சரியாக பதில் கிடைப்பது இல்லை என உறுப்பினர்கள் அதிருப்தி: கர்நாடக அரசுக்கு சபாநாயகர் காகேரி உத்தரவு
x
தினத்தந்தி 20 Sep 2022 6:45 PM GMT (Updated: 20 Sep 2022 6:46 PM GMT)

சரியாக பதில் கிடைப்பது இல்லை என உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்ததால் கர்நாடக அரசுக்கு சபாநாயகர் காகேரி உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் நேற்று உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு எழுத்து மூலமான பதில்களை சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி தாக்கல் செய்தார். சுமார் 200 கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் 50 கேள்விகளுக்கு மட்டுமே அரசு பதிலளித்தன. இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தன்வீர்சேட், பிரியங்க் கார்கே உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுந்து, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அரசு சரியாக பதில் அளிப்பது இல்லை என்று கூறி தங்களின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அப்போது சபாநாயகர் காகேரி, "உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சரியாக பதில் கிடைப்பது இல்லை என்பதை நானும் கவனித்தேன். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அரசு ஏன் தாமதிக்கிறது. உறுப்பினர்களின் அனைத்து கேள்விகளுக்கும் அரசு பதிலளிக்க வேண்டும்" என்றார். அதற்கு பதிலளித்த மந்திரி மாதுசாமி, உறுப்பினர்களின் அனைத்து கேள்விகளுக்கும் கூட்டத்தொடர் நிறைவடைவதற்குள் பதிலளிக்கப்படும் என்று கூறினார்.


Next Story