ஓணம் பண்டிகையையொட்டி மைசூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்


ஓணம் பண்டிகையையொட்டி மைசூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்
x

ஓணம் பண்டிகையையொட்டி மைசூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

பெங்களூரு:

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஓணம் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் யஷ்வந்தபுரம்-கொல்லம், மைசூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற 7-ந் தேதி யஷ்வந்தபுரத்தில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரெயில் இயங்குகிறது. யஷ்வந்தபுரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் ரெயில் 8-ந் தேதி அதிகாலை 4.10 மணிக்கு கொல்லத்திற்கு செல்கிறது. 8-ந் தேதி காலை 6.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் ரெயில் அன்று இரவு 10 மணிக்கு யஷ்வந்தபுரத்தை வந்தடைகிறது.

இதுபோல மைசூருவில் இருந்து 7-ந் தேதி மதியம் 12.15 மணிக்கு புறப்படும் ரெயில் 8-ந் தேதி காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு செல்கிறது. திருவனந்தபுரத்தில் இருந்து 8-ந் தேதி மதியம் 12.45 மணிக்கு புறப்படும் ரெயில் 9-ந் தேதி காலை 11.45 மணிக்கு மைசூருவுக்கு வருகிறது. இந்த ரெயில் மண்டியா, கெங்கேரி, கே.எஸ்.ஆர். பெங்களூரு, கன்டோன்மெண்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.


Next Story