பையப்பனஹள்ளி-விசாகப்பட்டினம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்


பையப்பனஹள்ளி-விசாகப்பட்டினம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்
x

பையப்பனஹள்ளி - விசாகப்பட்டினம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

யஷ்வந்தபுரம்-கச்சிகுடா இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரெயில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அந்த ரெயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற 29-ந் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் யஷ்வந்தபுரத்தில் இருந்து கச்சிகுடாவுக்கு ரெயில் இயங்க உள்ளது. 30-ந் தேதி முதல் சனிக்கிழமைகளில் கச்சிகுடாவில் இருந்து யஷ்வந்தபுரத்திற்கு ரெயில் வருகிறது. வெள்ளிக்கிழமைகளில் யஷ்வந்தபுரத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு கச்சிகுடா செல்கிறது. கச்சிகுடாவில் இருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு பெங்களூருவுக்கு வருகிறது.

இதுபோல் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பெங்களூரு பையப்பனஹள்ளி-விசாகப்பட்டினம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி அடுத்த மாதம்(ஆகஸ்டு) 7-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 25-ந் தேதி வரை பையப்பனஹள்ளியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் ரெயில் இயங்குகிறது. அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் செப்டம்பர் 26-ந் தேதி வரை விசாகப்பட்டினம்- பையப்பனஹள்ளி இடையே ரெயில்கள் இயங்குகிறது.

இவ்வாறு தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.


Next Story