இலங்கை பொருளாதார நெருக்கடி; தென்னிந்திய துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து அதிகரிப்பு


இலங்கை பொருளாதார நெருக்கடி; தென்னிந்திய துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து அதிகரிப்பு
x

இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பன்னாட்டு சரக்கு கப்பல்கள் தென்னிந்திய துறைமுகங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2020 ஆம் ஆண்டு வரை சரக்கு போக்குவரத்தில் இலங்கையின் கொழும்பு துறைமுகம், உலக அளவில் 25-வது இடத்தில் இருந்தது. மும்பை, சென்னை உள்ளிட்ட பிற இந்திய துறைமுகங்கள் பின்தங்கி இருந்தன.

இந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2 மாதங்களாக எண்ணூர் காமராஜர் துறைமுகம், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், கொச்சின் ஐ.சி.டி.டி. துறைமுகம் ஆகியவற்றில் சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து 46 சதவீதம் அதிகரித்து, 16.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. கொச்சின் ஐ.சி.டி.டி. துறைமுகத்தில் கண்டெய்னர் போக்குவரத்து, கடந்த 2021 ஏப்ரலில் 4,415 ஆக இருந்த நிலையில், 2022 ஏப்ரலில் 15,324 ஆக 247 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து 3.4 சதவீதம் அதிகரித்து 55.58 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story