கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை
கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்
பெங்களூரு: பெங்களூரு புலிகேசிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கே.எச்.பி. காலனி பகுதியில் வசித்து வந்தவர் பிரசாந்த்(வயது 24). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் அர்ஜூன். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பு தள்ளுவண்டியில் விற்பனை செய்த மீனை அர்ஜூன் வாங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த பிரசாந்த், மீன் வியாபாரியிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை அர்ஜூன் தட்டிக்கேட்டதால், அர்ஜூனிடமும், பிரசாந்த் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஜூன் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து பிரசாந்தை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த பிரசாந்த் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து புலிகேசிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அர்ஜூனை வலைவீசி தேடிவருகின்றனர்.