சான்ட்ரோ ரவி பற்றி திடுக்கிடும் தகவல்கள்; அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு பெண்களை சப்ளை செய்தது அம்பலம்
விபசார தொழில் நடத்தி தலைமறைவாக உள்ள சான்ட்ரோ ரவி பற்றி திடுக்கிடும் தகவல்கள் ெவளியாகி உள்ளது. அவர் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு பெண்களை சப்ளை செய்தது அம்பலமாகி உள்ளது.
மைசூரு:
சான்ட்ரோ ரவி
மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் சான்ட்ரோ ரவி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது 2-வது மனைவி மைசூரு விஜயநகர் போலீஸ் நிலையத்தில் கணவன், தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக புகார் அளித்தார். ேமலும், அரசியல் தலைவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இளம்ெபண்களை சப்ளை செய்வதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையே அவர், மந்திரிகள் அரக ஞானேந்திரா, எஸ்.டி.சோமசேகருடன் இருக்கும் படங்கள் ெவளியாகின. மேலும் சான்ட்ரோ ரவி கட்டுக்கட்டாக பணத்துடன் இருக்கும் படமும் ெவளியானது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மேலும், சான்ட்ரோ ரவி குறித்து உயர்மட்ட விசாரணைக்கு பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். அவர் ெவளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக்-அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது. அவரை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
திடுக்கிடும் தகவல்கள்
இந்த நிலையில் சான்ட்ரோ ரவி பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் ெவளியாகி உள்ளது. சான்ட்ரோ ரவி, இளம்பெண்களுடன் பழகி அவர்களை தனது வலையில் வீழ்த்தி திருமணம் செய்வார். பின்னர் அந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இதன்மூலம் அவர் பல பெண்களை விபசாரத்தில் தள்ளி உள்ளார். தனது உண்மையான அடையாளத்தை மறைத்து 4 பெண்களை திருமணம் செய்துள்ளார். இவரது உண்மை முகம் தெரிந்து 3 பேர் அவரை பிரிந்து சென்றுவிட்டனர். 3-வது மனைவி மட்டும் அவருடன் வசித்து வருகிறார். அவர் மூலம் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
சான்ட்ரோ ரவியின் விபசார தொழிலை அவரது 3-வது மனைவி தான் கவனித்து வருகிறார். சான்ட்ரோ ரவியால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க முன்வந்தால், அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் மூலம் அவர்களை மிரட்டி ஒடுக்கி வந்துள்ளார். இதனால் யாரும் அவர் மீது புகார் அளிக்க முன்வரவில்லை.
6 பங்களாக்கள்
சான்ட்ரோ ரவி விபசாரத்தில் தள்ளும் இளம்ெபண்களுக்கு அவா்களின் வயதுக்கு ஏற்றார் போல் கார்களின் ெபயர்களை வைத்துள்ளார். உதாரணமாக 20 வயது ெபண்ணுக்கு ஆடி கார் என்று பெயர் வைப்பார். அந்த பெண்களை அவர், அரசியல்வாதிகள், போலீஸ், அரசு அதிகாரிகளுக்கு சப்ளை ெசய்து வந்தார். அதன்மூலம் வரும் பணத்தில் பெங்களூரு, ராமநகர், மைசூருவில் 6 சொகுசு பங்களாக்களை சான்ட்ரோ ரவி வாங்கி உள்ளார்.
விபசாரத்தில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் கர்ப்பமானால் அவர்களுக்கு கருகலைப்பும் செய்துள்ளார். ஒரு டாக்டரிடம் 5 பெண்களுக்கு தான் கருகலைப்பு செய்வார். எந்த விஷயத்தில் அவர் நேரடியாக ஈடுபடுவது கிடையாது. இது தவிர அரசியல் பிரமுகர்களை வைத்து, அரசு அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் வாங்கி கொடுத்து வந்தார். இதிலும் அதிகளவு வருமானம் கிடைத்தது.
ஆடியோ வைரல்
கடந்த 20 ஆண்டுகளில் 6 தொழில்களை சான்ட்ரோ ரவி செய்து வந்துள்ளார். அதில் விபசாரத்தை மட்டும் அவர் முதன்மையான தொழிலாக நடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரது 2-வது மனைவி போலீசில் புகார் கொடுத்ததால் அவரது உண்மையான முகம் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. இந்த நிலையில் போலீஸ் தேடுவதை அறிந்ததும் சான்ட்ரோ ரவி தலைமறைவாகி விட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்று போலீசாரால் உறுதி செய்ய முடியவில்லை.
இதற்கிடையே சான்ட்ரோ ரவி பேசிய ஆடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களின் துணையுடன் தான், பணம் வாங்கி கொண்டு அரசு அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்தேன் என்று பேசி உள்ளார். அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.