வாகனங்களை திருடிய 2 பேர் சிக்கினர்


வாகனங்களை திருடிய  2 பேர் சிக்கினர்
x

வாகனங்களை திருடிய 2 பேர் சிக்கினர்

பெங்களூரு: பெங்களூரு எலகங்கா போலீசார் தங்களது கிடைத்த தகவலின்பேரில் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருக்கும் இருசக்கர வாகனங்களை திருடி விற்றதாக 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆர்.டி.நகரை சேர்ந்த முபாரக் (வயது 20), எலகங்கா பழைய டவுனை சேர்ந்த மகேஷ் (27) என்பது தெரியவந்தது.

கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 11 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டனர். அதன்மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். கைதான 2 பேர் மீதும் எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story