நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை: டிகே சிவக்குமார் சகோதரர் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை: டிகே சிவக்குமார் சகோதரர் பேட்டி
x

தற்போதைய அரசியல் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் டி.கே.சுரேஷ் எம்.பி. தெரிவித்துள்ளா

பெங்களூரு,

ராமநகரில் காங்கிரஸ் எம்.பி.யும், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரின் சகோதரருமான டி.கே.சுரேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு அதிகார தாகம் இருக்கிறது. இது அவரது பேச்சில் பலமுறை தெரிந்திருக்கும். காங்கிரஸ் அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறுவதை குமாரசாமி வாடிக்கையாக வைத்திருக்கிறார். நான் எப்போதும் வளர்ச்சி மீது தாகம் கொண்டு இருக்கிறேன். எனது தொகுதியில் வளர்ச்சி பணிகளை மட்டுமே செய்து வருகிறேன். அந்த தாகம் இன்னும் ஒரு ஆண்டுக்கு மட்டுமே இருக்கிறது.

அடுத்த ஆண்டு(2024) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தொண்டர்கள், தொகுதி மக்களுடன் ஆலோசிப்பேன். தகுதியான ஒருவர் போட்டியிட தயாராக இருந்தால், அவருக்கு ஆதரவு அளிப்பேன்.

தற்போதைய அரசியல் அவ்வளவு சிறப்பாக இல்லை. அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு புறநகர் தொகுதியில் வேறு ஒருவருக்கு வாய்ப்பளிக்கலாம் என்பது எனது தனிப்பட்ட விருப்பமாகும். நாடாளுமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ:) கட்சிகள் ஒன்று சேர்ந்து திட்டமிடுவதாக நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். உள்ஒப்பந்தம், கூட்டணி எது வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்.

தேர்தலில் வாக்களிப்பது மக்கள். அவர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு எடுப்பார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில்மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. நடைபெற உள்ள தேர்தலில் கர்நாடகத்தில் 20 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும்.இவ்வாறு டி.கே.சுரேஷ் எம்.பி. கூறினார்.


Next Story