வங்க கடலில் உருவான 'மோக்கா புயல்' கரையை கடந்தது...!


வங்க கடலில் உருவான மோக்கா புயல் கரையை கடந்தது...!
x

இந்த மோக்கா புயல் வலுவிழந்து அதி தீவிர புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மோக்கா புயல் வடக்கு திசையில் நகர்ந்து நேற்று முன் தினம் மிகத் தீவிர புயலாக மாறி மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்காளதேச கடற்கரை பகுதியில் மோக்கா புயல் மிக அதிதீவிர புயலாக கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மோக்கா புயல் கரையை கடந்தபோது 210 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.இந்த மோக்கா புயல் அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழந்து அதி தீவிர புயலாக மாறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story