மாணவியின் ஆபாச படத்தை வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வைத்த ஆசிரியர்


மாணவியின் ஆபாச படத்தை  வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வைத்த ஆசிரியர்
x

மாணவியின் ஆபாச படத்தை வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

பெலகாவி: பெலகாவி மாவட்டம் சவுதத்தி தாலுகா எக்குந்தி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மகேஷ் சிவலிங்கப்பா பிரதாரா (வயது 44) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். இவர் பள்ளியில் படித்து வந்த ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததுடன், அந்த மாணவியை அவர் ஆபாசமாக படங்களும் செல்போனில் எடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு, வேறொருவருடன் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதை அறிந்த உடற்கல்வி ஆசிரியர் மகேஷ், தனது செல்போன் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் மாணவியின் ஆபாச படத்தை பதிவிட்டுள்ளார்.


இதனால் மாணவியின் திருமணம் தடைப்பட்டு போனது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தினரும், கிராம மக்களும் நேற்று பள்ளிக்கு சென்று ஆசிரியர் மகேசை பிடித்த சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவரை எமகுந்தி போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story