பிட் பேப்பரை கொடுத்த மாணவன்..! லவ் லெட்டர்னு வீட்டில் போட்டு கொடுத்த மாணவி! பறிபோன உயிர்
யாரென்றே தெரியாத ஒருவர் திடீரென தேர்வு சமயத்தில் பேப்பரை போட்டதால், அதை அந்த மாணவி காதல் கடிதம் என்று நினைத்துவிட்டார்.
பாட்னா
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தவர் தயாகுமார்(12). அரையாண்டு தேர்வுக்கு தயா குமார் தனது சகோதரியை அழைத்துச் சென்று உள்ளார். தனது அக்கா எப்படியாவது நல்ல மார்க் வாங்க வேண்டும் என்று நினைத்த அந்த மாணவர் அக்காவுக்காகப் பிட்டையும் கையோடு எடுத்துச் சென்று உள்ளார்.
தயாகுமாருக்கு அன்று தேர்வு இல்லை என்பதால் அவர் உள்ளே செல்லவில்லை. அவரது அக்காவும் அவர்களுடன் படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவிகளும் வழக்கம் போலத் தேர்வை எழுதத் தொடங்கி உள்ளனர். இது தான் சரியான நேரம் என்று கருதிய தயா குமார் வெளியே இருந்து ஜன்னல் வழியாக பிட் பேப்பரை அக்காவிடம் போட்டுள்ளார். இருப்பினும், அது எதிர்பாராத விதமாக அருகே இருந்த மற்றொரு மாணவி அருகே விழுந்துவிட்டது.
யாரென்றே தெரியாத ஒருவர் திடீரென தேர்வு சமயத்தில் பேப்பரை போட்டதால், அதை அந்த மாணவி காதல் கடிதம் என்று நினைத்துவிட்டார். இதனால் பயந்துபோன அந்த மாணவி தனது சகோதரர்களிடம் இது குறித்துத் தெரிவித்து உள்ளார். அந்த மாணவி தான் எதோ பயத்தில் கூறிவிட்டார் என்றால் இவர்களும் அதை என்னவென்று விசாரிக்காமல் நேரடியாகச் சிறுவன் தயா குமாரை தேடிச் சென்றுவிட்டனர்.
அக்காவுக்காகப் பிட்டை தூக்கி வீசிய அந்த சிறுவனைப் பிடித்து இந்த வயசில் உனக்கு லவ் கேக்குதா என்றே சிறுமியின் சகோதரர்கள் தாக்கி உள்ளனர். அத்துடன் மட்டும் விட்டுவிடாமல் அந்த சிறுவனை இவர்கள் கடத்திச் சென்றும் தாக்கி கொலைச் எய்து உள்ளனர் என கூறப்படுகிறது. இந்த கொடூரம் நடந்து சுமார் நான்கு நாட்களுக்குப் பின்னரே, அந்த சிறுவனின் உடல் பாகங்கள் அருகே உள்ள ரெயில் நிலையத்தில் மீட்கப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கினர். குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்த போலீசார் சிறுமியின் குடும்பத்தினரைக் கைது செய்தனர். நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் சிறுவனை அடித்துக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.