ஜூலை 17-ந்தேதி நடைபெறும் 'நீட்' தேர்வை தள்ளிவைக்க மாணவர்கள் கோரிக்கை


ஜூலை 17-ந்தேதி நடைபெறும் நீட் தேர்வை தள்ளிவைக்க மாணவர்கள் கோரிக்கை
x

மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான ‘நீட்’, அடுத்த மாதம் 17-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதுடெல்லி,

மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான 'நீட்', அடுத்த மாதம் 17-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த தேர்வுக்கு தயாராவதற்கான கால அவகாசம் குறைவாக இருப்பதால், இந்த தேர்வை தள்ளிவைக்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுதொடர்பாக ஆன்லைன் கோரிக்கை மனு ஒன்றை தயாரித்து தேசிய தேர்வு முகமைக்கு அனுப்பி உள்ளனர்.

அதில் அவர்கள், '2021-ம் ஆண்டுக்கான இளங்கலை நீட் கவுன்சிலிங் கடந்த மார்ச் மாதத்தில் முடிந்துள்ள நிலையில், 2022-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ந்தேதி நடைபெறுகிறது. ஆனால் மிகப்பெரிய பாடத்திட்டத்தை வெறும் 3 மாதங்களில் எப்படி படிக்க முடியும்?' என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அது மட்டுமின்றி, ஜே.இ.இ., மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு உள்ளிட்ட முக்கியமான தேர்வுகளும் இந்த நாட்களில் வருவதால் நீட் தேர்வை தள்ளி வைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டாக்கும் டிரெண்டாகி வருகிறது.


Next Story