டெல்லி அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருந்துகள்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு


டெல்லி அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருந்துகள்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு
x

கோப்புப்படம் 

டெல்லி அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருந்துகள் வினியோகிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மாநில சுகாதாரப்பணிகள் அமைப்பின் கீழ் இயங்கி வரும் மத்திய கொள்முதல் நிறுவனம் சார்பில் தரமற்ற மருந்துகள் வினியோகிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அந்த மருந்துகளின் மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டன. இதில் அந்த மருந்துகள் தரநிலை சோதனைகளில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த டெல்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். அதே போல் டெல்லி அரசு மருத்துவமனைகளுக்கு தரமற்ற மருந்துகளை வினியோகித்தது தொடர்பான விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டுமென டெல்லி அரசின் ஊழல் தடுப்புத்துறையும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

அந்த பரிந்துரையில் மத்திய கொள்முதல் முகமை மட்டுமின்றி முழு வினியோகச் சங்கிலியையும் விசாரிக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் டெல்லி அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருந்துகள் வினியோகிக்கப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


Next Story