உத்தரபிரதேச ரெயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து.!


உத்தரபிரதேச ரெயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து.!
x

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கான்பூர்,

உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூர் ரயில் நிலையத்தில் உள்ள உணவுக்கடை ஒன்றில் திடீர் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில், உணவு கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே மற்றும் மின்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story