மணிப்பூரில் திடீர் துப்பாக்கிச்சூடு - 2 ராணுவ வீரர்கள் காயம்
தேடுதல் வேட்டையில் ஒரு இயந்திரத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர்,
மணிப்பூரில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர்கள் இருவர் காயமடைந்தனர். மேற்கு இம்பால் மாவட்டம், போல்ஜங் பகுதியில், கிளர்ச்சியாளர்கள் இன்று காலை திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதற்கு ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் 2 வீரர்கள் லேசான காயமடைந்ததாகவும், அவர்கள் இருவரது உடல்நிலையும் சீராக இருப்பதாகவும், ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், தேடுதல் வேட்டையில் ஒரு இயந்திரத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story