சிக்கமகளூருவில் திடீர் கனமழை


சிக்கமகளூருவில் திடீர் கனமழை
x

சிக்கமகளூரு திடீர் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிக்கமகளூரு:-

கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதேபோல் சிக்கமகளூரு மாவட்டத்திலும் பகலில் வெயிலும், இரவில் குளிரும் நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று காலை சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கொட்டிகேஆரா, பனகல், பாலூர், குன்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென்று கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் அங்கு கனமழை கொட்டி தீர்த்தது. இது 2023-ம் ஆண்டின் முதல் மழை ஆகும். இந்த கனமழையால் காபி தோட்ட உரிமையாளர்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story