டெல்லியில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை: விமான சேவைகள் பாதிப்பு


டெல்லியில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை: விமான சேவைகள் பாதிப்பு
x

டெல்லியில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலையில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. வாகன போக்குவரத்து வழக்கத்தைவிட மெதுவாகவே இருந்தது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக, விமானங்களை அறிவிக்கப்பட்ட நேரத்தில் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. பயணிகள் முன்பதிவு செய்துள்ள விமானங்களுக்கான பயண நேரம் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களிடம் கேட்டு அறிந்துகொள்ளும்படி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தினர். டெல்லியில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 30ம் தேதிவரை வெப்ப அலை இருக்காது என கணித்துள்ளது.


Next Story