மைசூருவில், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


மைசூருவில், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

மைசூருவில், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மைசூரு:

மைசூருவில், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தமிழக மாணவி

தமிழ்நாடு நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜீஸ்னா (வயது 20). இவர் கர்நாடக மாநிலம் மைசூரு ஸ்ரீராமபுரா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ஜீஸ்னா, கடந்த மாதம் கல்லூரியில் நடந்த தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததாக தெரிகிறது.

இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். மேலும் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் கல்லூரி வகுப்புகள் முடிந்ததும் ஜீஸ்னா, விடுதிக்கு வந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் விடுதியில் தனியாக இருந்த அவர், திடீரென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறிது நேரம் கழித்து அவரது அறையில் தங்கி இருந்த மற்றொரு மாணவி வந்தார். அப்போது கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால், ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது, ஜீஸ்னா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் மைசூரு புறநகர் போலீசார் விடுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார், தூக்கில் பிணமாக கிடந்த ஜீஸ்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மனவருத்தத்தில் இருந்த ஜீஸ்னா, தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மைசூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story