வாரத்துக்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்பதில் தவறு இல்லை: காங். எம்.பி மனிஷ் திவாரி


வாரத்துக்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்பதில் தவறு இல்லை: காங். எம்.பி மனிஷ் திவாரி
x

வாரத்திற்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்ற இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் கருத்துக்கு ஆதரவாக மனிஷ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

"இந்தியா வேகமாக முன்னேற வேண்டுமானால் ஒவ்வொருவரும் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலைபார்க்க வேண்டும்" என இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி அண்மையில் பேசியிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் பதிவாகி வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி மனிஷ் திவாரி, வாரத்திற்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்ற இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் கருத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனிஷ் திவாரி கூறியிருப்பதாவது:-

"வாரத்துக்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்ற இன்போசிஸ் நாராயணமூர்த்தி கூறியதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு? அவர் கூறியதில் என்ன தவறு? இந்தியா உண்மையிலேயே ஒரு பெரிய சக்தியாக மாற வேண்டுமானால், குறைந்தது இன்னும் இரண்டு தலைமுறையினர் வாரத்திற்கு 70 மணி நேரத்தை தங்கள் பணி நெறிமுறையாக மாற்றிக்கொள்ள வேண்டும். வாரத்தில் 70 மணி நேரம் பணி, ஒரு நாள் விடுமுறை, வருடத்தில் 15 நாட்கள் சுற்றுலா செல்வதற்கான விடுமுறை என்பதை நாம் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.


Next Story