தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு - ஜனதா தளம்(எஸ்) அறிவிப்பு


தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு - ஜனதா தளம்(எஸ்) அறிவிப்பு
x

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக ஜனதா தளம்(எஸ்) கட்சி அறிவித்துள்ளது.

பெங்களூரு:

ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் அதன் துணைத்தலைவர் பண்டப்பா காசம்பூர் தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. சட்டமன்ற ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி கெரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளார். அதனால் அவர் வீட்டில் இருந்தபடி காணொலி மூலம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு பண்டப்பா காசம்பூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரவுபதி முர்முவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு போராடியவர் தேவேகவுடா. ஒரு பெண் வேட்பாளர், அதுவும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை ஆதரிக்கிறோம். ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையில் எந்த கட்சி என்பது முக்கியம் அல்ல. வேட்பாளர் எப்படிப்பட்டவர் என்பதை பார்க்க வேண்டும். அந்த வகையில் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்' என்றார்.


Next Story