லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை தாக்கிய ஆம்ஆத்மி எம்.எல்.ஏவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள்..! -


லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை தாக்கிய  ஆம்ஆத்மி எம்.எல்.ஏவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள்..! -
x
தினத்தந்தி 18 Sept 2022 3:57 PM IST (Updated: 18 Sept 2022 3:58 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் சோதனை மேற்கொள்ள சென்ற அதிகாரியை ஆம் ஆத்மி எம்.எல்.ஏவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமனதுல்லா கானின் வீட்டில் நேற்று முன்தினம் சோதனை செய்ய சென்றபோது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவரை அங்கிருந்தவர்கள் தாக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

வக்பு வாரிய வழக்கு தொடர்பாக ஜாமியா நகரில் உள்ள அமனதுல்லா கானின் வீட்டில் சோதனை செய்ய சென்றபோது எம்.எல்.ஏவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிகாரி ஒருவரை தாக்கியதாக வீடியோ ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜாமியா நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story