பாலிவுட் படத்தில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி; பிரிவு உபசார விழாவில் தகவல்


பாலிவுட் படத்தில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி; பிரிவு உபசார விழாவில் தகவல்
x

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நாகேஸ்வர ராவ் பல படங்களில் நடித்து உள்ளார் என மூத்த வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியான எல். நாகேஸ்வர ராவ் 2016ம் ஆண்டு மே 13ந்தேதியில் இருந்து அந்த பதவியில் நீடித்து வருகிறார். வருகிற ஜூன் 7ந்தேதியுடன் அவர் ஓய்வு பெற இருக்கிறார்.

இதனை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நாகேஸ்வர ராவுக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இதில், சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு துணை தலைவர் பிரதீப் ராய் என்பவரும் கலந்து கொண்டார்.

மூத்த வழக்கறிஞரான அவர் விழாவில் பேசும்போது, நீதிபதி நாகேஸ்வர ராவ் பாலிவுட் படம் உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். இந்தியில் நடிகர்கள் காதர் கான் மற்றும் சஞ்சய் தத் நடித்த கனூன் அப்னா அப்னா என்ற படத்தில், காவல் ஆய்வாளர் வேடத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் நடித்துள்ளார் என குறிப்பிட்டார்.

இந்த விழாவை சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. தொடர்ந்து ராய் கூறும்போது, நீதிபதி நாகேஸ்வர ராவ் பன்முக திறமை வாய்ந்தவர். அவர் ஒரு நல்ல கிரிக்கெட் வீரரும் கூட. உயர்ந்த தலைவரான அவர் ஒவ்வொரு துறையிலும் பங்காற்றி இருக்கிறார் என ராய் புகழாரம் சூட்டினார்.

1 More update

Next Story