ரூ.70 கோடி அரசு நிலத்தை மீட்க பி.டி.ஏ.வுக்கு, சுப்ரீம் கோர்ட்டு அனுமதி


ரூ.70 கோடி அரசு நிலத்தை மீட்க பி.டி.ஏ.வுக்கு, சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
x

பெங்களூருவில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான ரூ.70 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்க பி.டி.ஏ.வுக்கு, சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான ரூ.70 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்க பி.டி.ஏ.வுக்கு, சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.

அரசு நிலம் ஆக்கிரமிப்பு

பெங்களூரு எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட் பானசாவடி ரோட்டில் அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர் 23 குண்டே நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 1977-ம் ஆண்டு நாராயண் ரெட்டி என்பவர் ஆக்கிரமித்து இருந்ததாக தெரிகிறது. அந்த நிலத்தை மீட்க பி.டி.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உள்ளது தொடர்பாக நாராயண் ரெட்டிக்கு, பி.டி.ஏ. அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி இருந்தனர்.

ஆனால் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க எதிர்ப்பு தெரிவித்து நாராயண் ரெட்டி சார்பில் 1984-ம் ஆண்டு பி.டி.ஏ.வுக்கு எதிராக பெங்களூரு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை 4 ஆண்டுகள் நடந்த பின்னர் 1988-ம் ஆண்டு நிலத்தை கையகப்படுத்த பி.டி.ஏ.வுக்கு அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

ஆனால் இதனை எதிர்த்து கடந்த 2014-ம் ஆண்டு கர்நாடக ஐகோர்ட்டில் நாராயண ரெட்டியின் மகன்கள் ராமரெட்டி, லோகேஷ் ரெட்டி, மகள் அனுபமா ஆகியோர் ரிட் மனு தாக்கல் செய்தனர். இதுபோல பி.டி.ஏ. சார்பிலும் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ரிட் மனுக்கள் மீது விசாரணை முடிந்த நிலையில் கர்நாடக கோர்ட்டு பி.டி.ஏ.க்கு சாதகமாக தீர்ப்பு கூறியது. இந்த நிலையில் பெங்களூரு கோர்ட்டு, கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நாராயண் ரெட்டியின் மகன்கள், மகள் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனு மீதான இறுதி விசாரணையின் போது பெங்களூரு கோர்ட்டு, கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து 3 ஏக்கர் 23 குண்டே நிலத்தை மீட்க பி.டி.ஏ.வுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் அந்த நிலத்தை உடனடியாக மீட்க பி.டி.ஏ. முடிவு செய்து உள்ளது. மீட்கப்பட உள்ள நிலத்தின் மதிப்பு ரூ.70 கோடி ஆகும்.


Related Tags :
Next Story